Sunday, March 2, 2014

பிரமலைக் கள்ளர்கள் வரலாறு - முன்னுரை

Piramalai Kallars of Tamil Nadu : 

South Indian Sub Caste


குலசரித்திரம்
                மதுரைநகரத்துக்குமேற்குப்பகுதியில்வாழ்கின்றபிரமலைக்கள்ளர்கள்,
 மேல்நாட்டுகள்ளர்கள் என்றும்,ஆனையூர்கள்ளர்கள் என்றும் ஐரோப்பிய ஆய்வாளர்களால் குறிப்பிடப்படுகின்றனர்இப்பகுதியில் உள்ள ஆனையூர் கிராமம்,பாண்டியர் ஆட்சிகாலம்முதல் இப்பகுதிக்கான வருவாய் தலைமையகமாக (Revenue Head Quarters) இருந்ததுஅதனால் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் வாழ்ந்தகள்ளர்கள் ஆனையூர்கள்ளர்கள் எனப்பட்டனர்.
புறமலைநாடு
                திருப்பரங்குன்றமலைகிழக்குஎல்லையாகவும்,  ரத்தினகிரிமலை (கணவாய்மலைமேற்குஎல்லையாகவும்,  குண்டாறு தெற்குஎல்லையாகவும் நாகமலை வடக்கு எல்லையாகவும் கொண்டு அமைந்துள்ளபகுதியே புறமலை அல்லது பிரமலை நாடு என முத்துத்தேவர் குறிப்பிடுகிறார்இவற்றை அறுதியிடப்பட்ட எல்லைகளாகக் கொள்வதைக்காட்டிலும்பொது வானநிலவியல் குறிகளாகவேகொள்ளலாம்ஏனெனில் நாகமலைக்கு வடக்கேயும் சில பூர்வீகக் கள்ளர்கிராமங்கள் உள்ளனஅதனால் வைகை ஆற்றங்கரையையே இதன் வடக்கு எல்லையாகக்கருதமுடியும் என ஆனந்த பாண்டியன் குறிப்பிடுவதும் கவனிக்கத்தக்கது.
                இதுஇன்றைய மதுரைமாவட்டத்தின் உசிலம்பட்டி ஒன்றியம்செல்லம்பட்டி ஒன்றியம்சேடப்பட்டி ஒன்றியம்,திருமங்கலம் ஒன்றியம்திருப்பரங்குன்றம் ஒன்றியத்தின் மேற்குப்பகுதிசோழவந்தான் ஒன்றியத்தின் தென்பகுதிகளை உள்ளடக்கியதாகும்.
                இப்பகுதியைப் பூர்வீகமாகக் கொண்ட கள்ளர்கள் பிறமலைக்கள்ளர் என அழைக்கப்படுகின்றனர்இவர்கள் இப்பகுதியைப் பூர்வீகமாககொண்டிருந்தாலும் மதுரை நகரத்திலும்தேனிதிண்டுக்கல் மாவட்டங்களிலும் பரவிவாழ்கின்றனர்.
                1931க்குப்பின் சாதிவாரிக்கணக்கெடுப்பு நடைபெறவில்லை என்பதால் இவர்களது எண்ணிக்கையை அறுதியிட்டுக்கூற இயலவில்லை.
                ஆனால் சமீபத்தில் இவர்களைப்பற்றி ஆய்வுசெய்த அமெரிக்க ஆய்வாளர் ஆனந்தபாண்டியன் பிரமலைக்கள்ளர்களது மக்கள்தொகை ஒருமில்லியனுக்கும் சற்றுக்குறைவாக இருக்கும் என கணக்கிடுகின்றார்அதாவது இவர்களது தற்போதைய மக்கள்தொகை தோராயமாகப் பத்துலட்சமாக இருக்கவாய்ப்புள்ளது.
                கி.பி.8 ஆம் நூற்றாண்டில் கள்ளர்கள் இப்பகுதியில் வந்து குடியமர்ந்தனர் எனவரலாற்றாசிரியர் ஆர்கேகண்ணன் குறிப்பிடுகின்றனர்.
                அதன் பிறகு தான் மதுரைக்குக் கிழக்குப்பக்கத்திலிருந்து கள்ளர்கள் கொஞ்சம் கொஞ்சமாக இப்பகுதியில் குடியமரத்துவங்கினர்கி.பி 1655 இல் உரப்பனூரைச் சேர்ந்த திருமலை பின்னத்தேவன் என்பவரைப் இப்பகுதியின் தலைவராகப் பட்டங்கட்டி திருமலைநாயக்கர் ஒரு பட்டயத்தை வழங்குகின்றார்அப்பட்டயத்திலேயே நாடு எட்டு என்ற வார்த்தை குறிப்பிடப்பட்டுள்ளதுஅதன்படி நாடு எட்டிற்கும் கம்பளிவிரித்து நீதிபரிபாலனம் செய்கின்ற அதிகாரம் திருமலைபின்னத்தேவருக்கு அளிக்கப்படுகின்றதுஇதை வைத்துப்பார்க்கும்பொழுது 1650 களிலேயே இவர்கள் மத்தியில் எட்டுநாடு என்ற அமைப்பு உருவாகிவிட்டதுஅப்படி யென்றால் அதற்கு 2 அல்லது 3 தலை முறைகளுக்கு முன்பாக இவர்கள் இப்பகுதியில் குடியேறியிருந்தால்தான் அந்தநிலைப்பாட்டை அடைந்திருக்கமுடியும்.இதன்படிபார்த்தால் இவர்களது குடியேற்றம் 16 ஆம் நூற்றாண்டின் இறுதி ஆண்டுகளில் நிகழ்ந்திருக்கலாம்அமெரிக்க மானுடவியல் அறிஞர் ஸ்டுவர்டுப்ளாக்பர்ன்கள்ளர்கள் 1600 இல் ஆனையூர்பகுதியில் குடியேறினர் எனக் குறிப்பிடுகின்றனர்.
                சுமார் 400 ஆண்டுகளுக்கு முன்பு பிரான்மலைப்பகுதியில் பிரான்மலைகள்ளர் என்ற ஒரு வகுப்பார் வாழ்ந்துவந்தனர்.அவர்களில் ஒருசிலர் அவ்வகுப்பாரிடமிருந்து பிரிந்துவந்து மதுரைக்கு மேற்குப்பகுதிகளில் குடியமர்ந்தனர்அவர்கள் பிரான்மலைக்கள்ளர்கள் எனப்பட்டனர்அச்சொல்லே மருவி பிரமலைஎனப்பட்டது.
 இராஜதானி - எட்டுநாடு
24 உபகிராமங்கள்
                பிரமலைப்பகுதி இராஜதானி,  எட்டுநாடுகள், 24 உபகிராமங்கள் என மூன்று அடுக்குகளாக அமைந்துள்ளதுஇதன் தலைமைக் கிராமம் ராஜதானி என அழைக்கப்படுகிறதுஇவ்வகை அமைப்பு எக்காலத்தில் உருவாக்கப்பட்டது என்பதனை அறுதியிட்டுச் சொல்ல இயலவில்லைஆனால் 1655 இல்திருமலைநாயக்கர்உரப்பனூர் திருமலை பின்னத்தேவனுக்கு அளித்த பட்டயத்திலேயே எட்டுநாடு என்று குறிப்பிடப்பட்டுள்ளதுஅதனை வைத்துப் பார்க்கும்பொழுது அதற்கு ஒரு சில தலை முறைகளுக்கு முன்பாக இவ்வமைப்பு உருவாக்கப்பட்டிருக்கலாம்இந்த எட்டுநாடுகள் உருவாக்கப்பட்டபின்பு புதிதாக உருவானகிராமங்கள் அவற்றிற்குத் துணைகிராமங்கள் என்ற வகையில் உபகிராமங்களாக அடுத்த நிலையில் வைக்கப்பட்டிருக்கலாம்.

                கள்ளர்கள் தாங்களாகவே சுயமாகத் தாங்கள் வாழ்கின்ற பகுதியை எட்டுநாடுகளாகப் பகிர்ந்து கொண்டனர்அதில் தன்னரசு ஆட்சியை உருவாக்கினர்அதன்பிறகு திருமலைநாயக்கர் அவருக்கு அறிமுகமான பின்னத்தேவர் எனப்பெயரிட்டு இந்த எட்டுநாட்டின் தலைவராகநியமித்தார்அவருக்குத்துணையாக இரண்டு தேவர்களையும் நியமித்தார்அவர் வாழ்ந்த உரப்பனூர் கிராமம் எட்டுநாட்டின் தலைமை இடமாகக் கருதப்பட்டதுஅதுவரை தன்னரசாய்த் திகழ்ந்து இக்கள்ளர்நாடு உரப்பனூர் ராஜதானி என்ற பெயரில் நாயக்கமன்னர்களின் நேரடிக்கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டது.

                இனிராஜதானி - எட்டுநாடு - 24 உபகிராமம் என்ற இந்த மூன்று அடுக்குளின் அமைப்பு பற்றிச் சற்று விரிவாகக்காண்போம்.
                இந்த எட்டுநாடுகள், 24 உபகிராமங்களின் தோற்ற வரலாறுகளை அவர்கள் மத்தியில் இன்றும் வழக்கில் உள்ள மரபுவழி வரலாற்றுக் கதைகள் மூலம் பதிவு செய்கிறேன்.
        உரப்பனூர்பிரமலைக்கள்ளர் நாட்டின் தலைமைக் கிராமமாகக் கருதப்படுகின்றதுஓர் அப்பன் ஊர் என்ற சொல்லே உரப்பனூர் என்று மருவியது என்கின்றனர்இது கீழ்உரப்பனூர்மேல்உரப்பனூர்ஊராண்டஉரப்பனூர் என மூன்று கிராமங்களாக உள்ளதுஇவை இன்றைய திருமங்கலம் ஒன்றியத்தில் அமைந்திருக்கின்றன.
        பிறமலைப்பகுதிஎட்டுநாடுகளாகவும் இருபத்திநான்கு உபகிராமங்களாகவும் பிரிக்கப்பட்டுள்ளதுஇவை எங்ஙனம் நாடுகள் என்றும் உபகிராமங்கள் என்றும் இரண்டு நிலைகளில் பிரிக்கப்பட்டன என்பதனை அறுதியிட்டுக்கூ றஇயலவில்லை.முதலில் உருவாக்கப்பட்ட வைநாடுகள் என்றும் அதன்பின்பு உருவான கிராமங்கள் அதற்குத் துணையான உபகிராமங்கள் எனவும் பிரிக்கப்பட்டிருக்கலாம்இனிஎட்டுநாடுகள் பற்றிப்பார்ப்போம்பிறமலைப் பகுதி திடியன்வாலாந்தூர்புத்தூர்கருமாத்தூர்,பாப்பாப்பட்டிகொக்குளம்வேப்பனூத்துதும்மக்குண்டு என எட்டு நாடுகளாய் பிரிக்கப்பட்டுள்ளது.
                இதில் எது முதல் நாடு என்ற சர்ச்சை திடியன் நாட்டிற்கும்வாலாந்தூர் நாட்டிற்கும் இடையே பலதலைமுறைகளாக நடந்து வருகின்றது.
                கள்ளர்கள் தாங்களாகவே தங்களுக்குள் நாடுகளை உருவாக்கிக் கொண்டு அதில் தன்னாட்சி செலுத்திவந்தனர்.
                பிறகு திருமலைநாயக்கரின் ஆட்சிகாலத்தில் உரப்பனூர் ராஜதானி (ராஜதானி என்பதற்கு மாகாணம் என்றுபொருள்)என்ற பெயரில் மதுரை அரசின் நேரடிக்கட்டுப்பாட்டின் கீழ் இக்கள்ளர் நாடு கொண்டு வரப்பட்டதுஉரப்பனூரைச் சேர்ந்த பின்னத்தேவர் என்பவர் திருமலை பின்னத்தேவர் என்ற பட்டத்துடன் இவ்எட்டுநாட்டின் தலைவராக நியமிக்கப்பட்டார்அவர் தனது மருமகனைக் கௌரவிக்கின்றவகையில் வாலாந்தூர் நாட்டை தனது அதிகாரத்தின்கீழ் இருந்து உரப்பனூர் ராஜதானிக்கு முதல் நாடாக ஆக்கினார்.
                பொதுவாக 24 உபகிராமங்கள் என்று சொல்லப்பட்டாலும்எந்தெந்தக் கிராமங்கள் அதில் உள்ளடங்கும் என்பதில் பேறுபட்ட பட்டியல்கள் தரப்படுகின்றனஇதில் ஆரியப்பட்டி கோடாங்கி பெரிய பெருமாள்தேவர் ஒருபட்டியலையும்முத்துத்தேவர் ஒரு பட்டியலையும்டூமண்ட் ஒருபட்டியலையும் தருகின்றனர்.

                         கோடாங்கி பெரியபெருமாள் தேவர் பட்டியல்
                ஆரியப்பட்டி .கருப்பணன் என்பவரது தந்தை கோடாங்கி பெரியபெருமாள்தேவர் சுமார் 65 ஆண்டுகளுக்கு முன்பு தனது வீட்டுக்கணக்கு நோட்டில் எட்டுநாடுகள்  24 உபகிராமங்கள் பற்றிய பட்டியலை எழுதிவைத்துள்ளார்இது எனது களப்பணிக்காலத்தில் இப்பகுதி சமூக அமைப்பு பற்றி எனக்குக்கிடைத்த முக்கிய ஆவணமாகும்அவை :
         1. விக்கிரமங்கலம், 2. நாட்டார்மங்கலம், 3.வகுரணி, 4.காளப்பன்பட்டி, 5. மானூத்து,  6. அல்லிக்குண்டம், 7.பொசுங்குநகரம், 8.பிச்சங்குளம், 9, சாத்தங்குடி, 10.வடபழஞ்சி, 11.சாக்கிலிப்பட்டி, 12.தோப்பூர், 13.கப்பலூர், 14.தனக்கன்குளம், 15.விளாச்சேரி, 16.வடிவேல்கரை (கீழக்குயில்குடி) 17.சூடாபுளியங்குளம், 18. பன்னியான், 19. தாராப்பட்டி, 20.மேலக்கால், 21.கச்சிராப்பு, 22.காடுபட்டி, 23.அய்யனார்குளம், 24. கொடிக்குளம்.


முத்துத்தேவர் பட்டியல்

        1. விக்கிரமங்கலம், 2. நாட்டார்மங்கலம், 3.அய்யனார்குளம், 4.பன்னியான், 5. தாராப்பட்டி, 6. மேலக்கால்கச்சிராப்பு, 7.காடுப்பட்டி, 8.கொடிக்குளம்,9. வகுரணி, 10. அல்லிக்குண்டம், 11.மானுத்து, 12.பெருங்காமநல்லூர், 13. காளப்பன்பட்டி, 14.பூசநாதிபரும்என்றபூசலப்புரம், 15.மதிப்பனூர், 16. சாத்தங்குடி, 17. புங்கங்குளம், 18.சாக்கிலிப்பட்டி, 19.தோப்பூர், 20.மேல்நாடுசெட்டிகுளம், 21. கப்பலூர், 22.விளாச்சேரி 23.வடிவேல்கரை, 24.சூடாபுளியங்குளும்.

லூயிஸ்டூமண்ட் பட்டியல்

       1. விக்கிரமங்கலம், 2. நாட்டார்மங்கலம், 3.அய்யனார்குளம், 4. கொடிக்குளம், 5.முதலைக்குளம், 6. பன்னியான், 7.வடிவேல்கரை, 8.விளாச்சேரி, 9. தனக்கன்குளம், 10.சாக்கிலிபட்டி, 11.தோப்பூர், 12. மேல்நாடுசெட்டிகுளம், 13. கப்பலூர், 14.சாத்தங்குடி, 15. பன்னிக்குண்டு, 16. அம்மாப்பட்டி, 17.காளப்பன்பட்டி, 18.பூசலப்பரும், 19.மதிப்பனூர், 20.பெருங்காமநல்லூர், 21.மானூத்து, 22.அல்லிக்குண்டம், 23.வகுரணி, 24.மறவன்குளம்.
       மேலும் அவர் காடுபட்டியும் கச்சிராப்பும்தாராப்பட்டியும் உபகிராமங்களில் ஒன்றாகச் சிவணாண்டி சேர்வை வரிசைப் படுத்துவதாகக் குறிப்பிடுகின்றனர்.


குல தெய்வங்கள்
                தமிழ்ச் சமூகத்தின் தொன்மையான சமய மரபுகளையும் வழிபாடுகளையும் புரிந்து கொள்ள வேண்டு மென்றால் பிரமலைக்கள்ளர்களது வழிபாட்டு மரபுகளில் மூலமாகவே புரிந்து கொள்ள இயலும்ஏனெனில் தமிழ்ச் சமூகத்தின் பூர்வீக வழிபாட்டுச் சமயமரபுகளான இயற்கை வழிபாடுமுன்னோர் வழிபாடு,  தாய்த் தெய்வ வழிபாடுசண்டையில் இறந்து போன வீரர்களை வழிபடுகின்ற நடுகல் வழிபாடு போன்றவையே இன்றும் இவர்களின் அடிப்படை வழிப்பாட்டு மரபுகளாக உள்ளன.இவர்களது தெய்வங்கள் அனைத்தும் மேற்கூறிய நான்கு நிலைகளிலேயே அமைந்திருக்கின்றனஅவற்றைப் பல தெய்வ வடிவங்களில் வைத்து வழிபடுகின்றனர்அவை பின்வரும் நான்குவகைகளில் அமைந்துள்ளன.
1. குலதெய்வங்கள்,
2. காவல்தெய்வங்கள்
3. ஊர்ப்பொதுத்தெய்வங்கள் (அம்மன்)
4. நடுகல்தெய்வங்கள்
                ஒரே குல தெய்வங்களை வணங்குபவர்கள் ஒரே பங்காளிகளாகவும் கருதப்படுகின்றனர்இக்குல தெய்வங்களை வணங்குவதன்மூலம் தங்கள் குலம் பலகிப்பெருகுவதாக நம்புகின்றனர்பெரும்பாலும் முகம் தெரியாத முன்னோர்களும்,அவர்களால் நம்பப்பட்ட சக்திகளுமே குலதெய்வ வடிவங்களைப் பெறுகின்றனஅவ்வகையில் பிறமலைக்கள்ளர்கள் பலவகை ஆண் தெய்வங்களையும்பெண்  தெய்வங்களையும் தங்கள் குல தெய்வங்களாக வணங்குகின்றனர்.
                கழுவநாதன்பொன்னாங்கன்கடசாரிநல்லகுரும்பன்புன்னூர் அய்யனார்பூங்கொடி அய்யனார்ஊர்க்காளை அய்யனார்,கல்யாணக்கருப்புதென்கரைக்கருப்பு  (முத்தையா)  சோனைக்கருப்புபெத்தனசாமிஆதிசிவன்பெருமாள்மலைராமன்,கோட்டைக்கருப்புவாலகுருநாதன்குருநாதன்மாயன்வீரபுத்திரசாமிபதினெட்டாம்படிக் கருப்பு போன்ற ஆன் தெய்வங்களையும் பேச்சியம்மன்ஓச்சாண்டம்மன்சுந்தரவள்ளியம்மன்காத்தாண்டம்மன் (காத்தாண்டீஸ்வரி), அங்காளம்மன் (அங்காளஈஸ்வரி),சின்னக்காஅம்மன்காமாட்சியம்மன்கண்ணாத்தாள்ஒய்யாண்டாள்நல்லதங்காள் போன்ற பெண்தெய்வங்களையும் குல தெய்வங்களாக வணங்குகின்றனர்.
                ஒவ்வொரு குலதெய்வக் கோயிலும் ஒரு குறிப்பிட்ட வம்சாவளிக்குப் பாத்தியப்பட்டதாக உள்ளதுபெரும்பாலும் ஒரே ஆணின் மரபில் வந்த வம்சத்தவர்கள் அதனைக்குல தெய்வமாக வணங்குகின்றனர்சில குலதெய்வக்கோயில்களை ஒருவரின் ஆண்வாரிசுகளும்பெண்வாரிசுகளும் இணைந்தும் வணங்குகின்றனர்.
                இவ்வகையில் ஒவ்வொரு குல தெய்வக்கோயிலிலும் 21 பரிவார தெய்வங்களும் சிலகோயில்களில் 42 பரிவாரத் தெய்வங்களும் உள்ளனஏதாவது ஒரு தெய்வத்தின் பெயரில் கோயில் அமைந்திருந்தாலும்எல்லாக் கோயிலின் கருவறையிலும் அய்யன் சாமியே இடம் பெற்றுள்ளதுஅய்யன் சாமியே எல்லாத் தெய்வங்களுக்கும் மூலத்தெய்வமாகக் கருதப்படுகின்றதுஅந்த அய்யன்சாமியின் வலதுஇடதுபக்கங்களில் மற்றபரிவாரத் தெய்வங்கள் எல்லாம் வரிசையாக வைக்கப்பட்டுள்ளன.







Monday, January 27, 2014

பிரமலை கள்ளர் வரலாறு -பொருளடக்கம்

பிரமலை கள்ளர்  வரலாறு -பொருளடக்கம்















14. மதுரையில் கள்ளர்கள் ஆட்சி : 1781 - 1784

15. தமிழகக் காவல் முறை

16. கி.பி.1894 பண்டுக்கலகம்

17. திரு.முத்துராமலிங்கத்தேவர் வரலாறு

18. போசுடன் முத்துராமலிங்த்தேவரின் தியாகப்போர்

19. முக்குல சமுதாயம் : தேவர் அரசியலை திசை திருப்பியது

20. தேவர் அவர்களின் மனம் வெதும்பிய வாக்குமூலம்

21. திரு.மூக்கையாத்தேவர் திரு.முத்துராமலிங்கத்தேவரின் வாரிசானார்

22. திரு.முத்துசாமி வல்லத்தரசு

23. கி.பி.1911 குற்றபரம்பரைச் சட்டம் மகாணங்களுக்கு அமுல்படுத்துதல்

24. குற்றபரம்பரைச் சட்டம் யார் யார் மேல் பிரொகிக்கப்பட்டது

25. கி.பி.1916ல் பிரமலைக் கள்ளர் நாட்டில் குற்றபரம்பரைச் சட்டத்தின் தொடக்க நிலை

26. கி.பி.1920ல் பிரமலைக் கள்ளர்களின் மீது குற்றபரம்பரைச் சட்டம்,கி.பி.1920 பெருங்காமநல்லூர் கலவரம்

27. கி.பி.1920 பிரமலைக் கள்ளர் சமூகச் சீர்திருத்தச்சட்டம் திரு.A.K.ராஜாஐயர்

28. குற்றபரம்பரைச் சட்டத்தில் பிரமலைக் கள்ளர் பஞ்சாயத்து அமைப்பு

29. கி.பி.1920 - 1925 வரை பிரமலைக் கள்ளர் நாட்டில் வளர்ச்சிப் பணிகள்

30. கி.பி.1921 இல் பிரமலைக் கள்ளர்களின் சமூக பொருளாதார நிலை

31. குற்றபரம்பரைச் சட்டத்தில் பிரமலைக் கள்ளர்களுக்கு ஏற்பட்ட துயரங்கள்

32. கி.பி.1923 பிரமலைக் கள்ளர் சீர்திருத்தத் துறை

33. கி.பி.1925 - 1949 பிரமலைக் கள்ளர் சீர்திருத்தத் துறை : நிர்வாகமும் நீதியும்

34. கி.பி.1926 இல் பிரமலைக் கள்ளர் நாட்டில் கைரேகைப் பதிவு முறை

35. கி.பி.1947 இல் பிரமலைக் கள்ளர் மீதான குற்றபரம்பரைச் சட்டம் ரத்தானது

36. கி.பி.1916 முதல் பிரமலைக் கள்ளர் நாட்டில் விவசாயம்

37. பிரமலைக் கள்ளர் நாட்டில் கூட்டுறவு சங்கங்கள்




42. தேவர் சமுதாய மக்கள் சிந்தனைக்கும் செயலுக்கும்